ஸ்ரீநகர், ஆக.10: ஜம்முவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக ஊரடங்கு, தொலைதொடர்பு சேவை ரத்து, சமூக வலைத்தளங்கள் முடக்கம் என பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.

காஷ்மீர் பகுதி, முஸ்லிம்கள் அதிகம் வாழும் மாநிலம் என்பதால் நேற்று தொழுகைக்காக அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. எனினும் ஜம்மு பகுதியில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. கடைகளை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டதால் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது.