அடுக்கு மாடி குடியிருப்பு இடிந்து 4 பேர் பலி

TOP-5 இந்தியா

அகமதாபாத், ஆக.10: குஜராத் மாநிலத்தில் நேற்று நள்ளிரவு அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.

கெடா மாவட்டத்தில் பிரகதி நகரில் கனமழை வெள்ளத்தின் காரணமாக அங்குள்ள மூன்று மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 4 பேர் பலியாகினர். ஐந்து பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். ‘

மேலும் ஏழுக்கும் அதிகமானோர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது.

கட்டிட இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்ட கலெகடர் மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை விரைவுபடுத்தி வருகின்றனர்.