சென்னை, ஆக.10: நாளை காலை சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. விமான நிலையத்தில் இருந்து அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ள கலைவாணர் அரங்கம் வரை போலீசார் நிறுத்தப்படுகிறார்கள்.

மத்திய ரிசர்வ் படை, உள்ளூர் போலீஸ், அதிரடிப்படை என 3 அடுக்கு பாதுகாப்பு அவருக்கு அளிக்கப்படுகிறது. இந்த பாதுகாப்பு படையினர் இப்போதே கலைவாணர் அரங்கம் மற்றும் விமான நிலையப்பாதையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
கலைவாணர் அரங்கில் கடும் சோதனைக்கு பிறகே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.