ஒரே ரேஷன் கார்டு திட்டம்: பாஸ்வான் தொடங்கினார்

இந்தியா

புதுடெல்லி, ஆக.10: ரேஷன் பொருள்களை வேறு மாநிலத்தில் உள்ள கடைகளிலும் பெறும் திட்டத்தை மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தொடங்கி வைத்தார். நாட்டின் எந்த மூலையில் வசித்தாலும், அங்குள்ள ரேஷன் கடைகளில் பொருள்களை வாங்கும் வகையில், ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக, 4 மாநிலங்களில் இத்திட்டம் சோதனை முறையில் தொடங்கப்படு இருக்கிறது.

அதன்படி, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், இவற்றில் ஏதேனும் ஒரு மாநிலத்தில் உள்ள ரேஷன் கடையில் தங்களுடைய ரேஷன் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம். இதேபோல், மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், இவற்றில் ஏதேனும் ஒரு மாநிலத்தில் தங்கள் ரேஷன் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தை மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், தில்லியில் நேற்று தொடங்கி வைத்தார்.