அருண் ஜெட்லியை நலம் விசாரித்த துணை ஜனாதிபதி

இந்தியா

புதுடெல்லி, ஆக.10: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருண் ஜெட்லியின் உடல் நலம் குறித்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கேட்டறிந்தார். முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லிக்கு நேற்று திடீரென உடல்சோர்வும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டதைத் தொடர்ந்துஅவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லியின் உடல் நலம் பற்றி கேட்டறிந்தார். அருண் ஜெட்லி சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்குவதாகவும், அருண் ஜெட்லியின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் வெங்கையா நாயுடுவிடம் தெரிவித்தனர்.