சென்னை, ஆக.10: முன்அனுமதி பெறாமல் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனை முற்றுகையிட்ட மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உட்பட 477 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜம்மூ-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததுடன், அதனை இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றியதற்கு கண்டனம் தெரிவித்து, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்தமுயன்றனர்.

அதன்படி, முன் அனுமதி பெறாமல் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனை கடந்த 6-ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தமுயன்றதன் காரணமாக, ஜவாஹிருல்லா உட்பட 477 பேர் மீது நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி தலைமையில் 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.