காஞ்சிபுரம், ஆக. 10: சுகாதாரத்துறைச் சேர்ந்த மருத்துவர் கள் மற்றும் செவிலியர்களை மருத்துவ முகாம் களுக்கு செல்ல அனுமதிக்காமல் அவர்களின் அனுமதி சீட்டை கிழித்து எரிந்த காவலர்களை கண்டித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டம் நடத்தியதால் காஞ்சியில் பக்தர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளதால் அங்க 45 க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று அதிகாலை சுகாதார பணிகளுக்காக வந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை உள்ளே அனுமதிக்காமல் அவர் கொண்டுவந்த நுழைவுச் சீட்டை கிழித்து காவலர்கள் எரிந்ததால் விரக்தி அடைந்த 45 மருத்துவ முகாமில் இருக்கும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் நுழைவாயில் காவலர்களை கண்டித்து வெளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆதி அத்திவரதரை தரிசிக்க அதிக அளவில் பக்தர்கள், முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள் வருவதால் கூட்ட நெரிசலில் சிக்காமல் பாதுகாக்கவும், எதிர்பாராத வகையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ உதவி தேவைபட்டால் அவர்களுக்கு மருத்துவ உதவி செய்ய 45 மருத்துவ முகாம்களிலும் எந்த ஒரு மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.