சென்னை, ஆக.10: தமிழகத்தின் நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருக்கும் மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மலையை ஒட்டியிருக்கும் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் அதிகபட்ச மழை அளவு கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 35 செ.மீ. மழையும், மேல்பவானியில் 19 செ.மீ. மழையும், கோவை மாவட்டம் சின்னக்கால்லார் பகுதியில் 13 செ.மீ. மழையும், கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலையில் 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது என்றார்.