மழைநீர் சேகரிப்பு பிரசாரம் : ஜக்கி வாசுதேவ் ஆதரவு

சென்னை

சென்னை,ஆக.10: மழை நீர் சேமிப்பை சவாலாக எடுத்துக் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி.வேலுமணி விடுத்த கோரிக்கையை சத்குருஜக்கிவாசுதேவ் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனிப்பட்ட முறையில் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை வீட்டுக்கு வீடு நடைமுறைப்படுத்த டிஜிட்டல் பிரச்சாரத்தை கடந்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கினார். தமிழ்நாடு நீர்வளம் நமக்காக.

நாட்டுக்காக, நாளைக்காக என்ற பெயரில் இணையதள பிரச்சாரத்தை தொடங்கிய அமைச்சர் வேலுமணி, ட்விட்டர் வழியாக மழைநீர்சேமிப்பு தொடர்பாக வீடியோ ஒன்றை கடந்த 6ம் தேதி வெளியிட்டார். அதில் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்திர தீர்வு மழை நீர் சேகரிப்பு மட்டுமே என்று குறிப்பிட்டார்.

இந்த கோரிக்கையை ஏற்று கோவை ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குருஜக்கிவாசுதேவ், மழை நீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், ட்விட்டரில் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாடு நீர்வளம் என்ற இயக்கம் மேற்கொண்டு வரும் மழைநீர்சேகரிப்பு பிரச்சாரத்துக்கு தமது முழுஆதரவை தெரிவித்திருக்கிறார்.