மீண்டும் அஜித்துக்கு வில்லனாக அருண்விஜய்?

சினிமா

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள பிங்க் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை நேற்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனை அடுத்து அஜித்தின் அடுத்தப்படத்திற்காக ஹெச் வினோத் இயக்க போனிக் கபூர் தயாரிக்க இருக்கிறார். இந்தப் பட வேலைகளுக்காக இயக்குனரும் தயாரிப்பாளரும் ஐரோப்பாவுக்கு சென்றுள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாக இருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க அருண்விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறப்படுகிறது. அருண் விஜய் ஏற்கனவே என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்தது அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இப்போது சாஹோ, பாக்ஸர், அக்னி சிறகுகள் ஆகியப் படங்களில் அருண் விஜய் நடித்து வருகிறார்.