தனுஷ் நடித்து முடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் பிரச்சனைகள் முடிவடைந்து விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அவர் தற்போது ‘அசுரன்’ மற்றும் துரை செந்தில்குமார் இயக்கும் ஒரு படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.அசுரன் படத்தை பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்குகிறார். கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.

மிகவும் வித்யாசமான கதைகளத்துடன் உருவாகி வரும் மஞ்சுவாரியார் ஜோடியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பசுபதி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். அதேபோல் துரை செந்தில்குமார் இயக்கி வரும் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிகை சினேகா, மெஹ்ரின் பிர்ஜதா ஆகியோர் நடிக்கின்றனர். வில்லனாக நடிகர் நவீன் சந்திரா என்பவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அசுரன் படத்தின் ரிலீஸ் தேதியை நேற்று படக்குழுவினர் அறிவித்தனர். அதன்படி வரும் அக்டோபர் 4-ம் தேதி அசுரன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.