காஞ்சிபுரம், ஆக.11: காஞ்சி ஆதி அத்திவரதரின் நின்றகோலத்தின் 11 நாளான இன்று வெங்காய சருகு நிற பட்டாடையில் பல வண்ண மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகள் சூடி சிறப்பு அலங்காரத்தில் காட்சி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

41-வது நாளான நேற்று நள்ளிரவு வரை 3 லட்சத்து 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

இன்று விடுமுறை நாள், கடைசி ஞாயிறு மற்றும் ஏகாதசியை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் அலைமோதியது.

இதுவரை 41 நாட்களில் 80 லட்சத்து 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

இன்னும் 5 நாட்களே அத்தி வரதரை தரிசனம் செய்ய முடியும் என்பதால் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சுமார் 4 மணி நேரமாக 3 கிமீ தூரத்திற்கு நின்று காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்

ஆகஸ்ட் 16-ம் தேதியுடன் பக்தர்களுக்கு தரிசனம் அனுமதி நிறைவடைவதாக உள்ளது.

இதுவரை எண்ணபட்டதில் தற்காலிக உண்டியல்களில் ரூ.5 கோடியே 44 லட்சம் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி உள்ளனர்.