சிதம்பரம், ஆக.11: சர்வதேச தாய்ப் பால் வார விழா, வளர் இளம் பருவ விழிப்புணர்வு நாள் மற்றும் நீர்ச்சத்து ஊக்க நாள் ஆகியவற்றின் நிறைவு விழா சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.

பள்ளியின் முதல்வர் ரூபியால் ராணி முன்னிலையில் வீனஸ் பள்ளியின் துணை முதல்வர்சார்லஸ் கஸ்பர்ராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் இந்திய குழந்தைகள் நல மருத்துவச் சங்கத்தின் முன்னாள¢ தலைவரும் சிதம்பரம் நகரின் புகழ் பெற்ற குழந்தைகள் நல மருத்துவருமான டாக்டர். சிவப்பிரகாசம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தாய்ப்பாலின் முக்கியத்துவம், வளர் இளம்பருவ மாற்றம் குறித்த விழிப்புணர்வு மற்றும் உடல்நல மேம்பாடு குறித்து சிறப்புரையாற்றினார்.

முன்னதாக தாய்ப்பாலின் சிறப்பு குறித்த கையேட்டினை பள்ளியின் முதல்வர் ரூவியால் ராணி வெளியிட சிதம்பரம் இன்னர்வீல் ரோட்டரி சங்க முன்னாள் தலைவி ப.ஜோதிமணி பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் தாய்ப்பால் வார விழாப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.