சென்னை,ஆக.11: நாடு முழுவதும் நாளை பக்ரீத் பண்டிகை கொண்ட வுள்ள நிலையில், ஆடுகள் விற்பனைக்காக குவிந்துள்ளன. இஸ்லாமியர்கள் அனைவரும் நாளை பக்ரீத் பண்டிகையை கொண்ட உள்ள நிலையில், இந்நாளில் ஆடு, மாடுகளை இஸ்லாமியர்கள் பலியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆடுகள் விற்பனை ஜோராக நடைபெற்று வரும் நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஆடுகள் விற்பனைக்காக குவிந்துள்ளன. ரூ.10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனை இருந்தது.