சென்னை, ஆக.11: தமிழகத்தில், ‘பிளாஸ்டிக் கொடி’ அற்ற, சுதந்திர தின விழா கொண்டாடப் படுகிறது. கடைகளில், பிளாஸ்டிக் கொடி விற்பனை செய்தால், பறிமுதல் செய்து, அபராதம் விதிக்கவும், அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

தமிழகத்தில், 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு, ஜனவரி முதல், தடை விதிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவின்போது, வழக்கமாக, பிளாஸ்டிக் கொடி, தோரணங்கள் கட்டப்படுவது வழக்கம். சட்டையில் குத்தும் பிளாஸ்டிக் கொடிகள், தனி பிளாஸ்டிக் கொடிகளும் பயன்பாட்டில் இருந்தன. தற்போது தடை உள்ளதால் பிளாஸ்டிக் கொடிகள் விற்கப்படுவது தெரிய வந்தால், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள், அவற்றைப் பறிமுதல் செய்யவும், அபராதம் விதிக்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.