சென்னை,ஆக.11: நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட் டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில், இன்று மட்டும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தென் மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகாவில் தீவிரமடைந்துள்ளது. தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில், அதிகனமழை பெய்து வந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மழையின் தாக்கம் குறைந்துள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று மட்டும் நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட்டங்களில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை இருக்கும் என்றும் கூறி யுள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டின், ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மாக தேவாலாவில் 13 செ.மீ மழையும், கோவை சின்னக்கல்லாரில் 10 செ.மீ மழையும், சோழையார் மற்றும் அவலாஞ்சியில் தலா 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. சென்னயை பொறுத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும்,மாலையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.