புதிய தொழில் நுட்பம்: புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்நாடு

வேலூர், ஆக. 11: வி ஐ டி – ராபர்ட் பாஷ் நிறுவனம் இணைந்து புதியதொழில்நுட்ப த்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விஐடி வேந்தர் ஜி. கையெழுத்திட்டு பேசினார். வி ஐ டி – ராபர்ட் பாஷ் நிறுவனம் இணைந்து புதியதொழில்நுட்ப த்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைழழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற விஐடி வேந்தர்கோ.விசுவநாதன் கூறுகையில், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் வி ஐ டியும் – ராபர்ட் பாஷ் நிறுனவமும் இணைந்து தானியங்கி வாகனங்கள் குறித்த ஆராய்ச்சி செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஒப்பந்தத்தின் மூலம் ஆளில்லா வாகனம்வடிவமைப்பு, வாகனங்களின் புதிய தொழில்நுட்ப வடிவமைப்பு சம்மந்தமாக பல்வேறு வகையான ஆராய்ச்சி பணிகள் வி ஐ டியில் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் மாணவ, மாணவியருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கும் இந்த ஒப்பந்தம் வழி வகை செல்லும்.

இந்த நிகழ்ச்சியில் வி ஐ டி துணைத்தலைவர் டாக்டர் சேகர் விசுவநாதன் கூறுகையில், தானியங்கி வண்டிகள் குறித்த ஆராய்ச்சி மட்டுமல்லாது சுகாதார பராமரிப்பு கண்டரியும் முறை மற்றும் கூட்டு ஆராய்ச்சி நடவடிக்கைகளை வலுப்படுத்தப்படும் என்றார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வி ஐ டி வேந்தர் டாக்டர். கோ.விசுவநாதன், ராபர்ட் பாஷ் நிறுவன மூத்த துணைத்தலைவர் ஆர்.கே. செனாய் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அதனைத்தொடர்ந்து வி ஐ டி துணைத்தலைவர் டாக்டர்.சேகர் விசுவநாதன், துணை வேந்தர் டாக்டர். ஆனந்த் ஆ. சாமுவேல் , பதிவாளர் டாக்டர். கே.சத்தியநாராயணன், , மனித வள மேம்பாடு துறை தலைவர் ஸ்ரீ ராம் மற்றும் வி ஐ டி பேராசிரியர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர்.