தொழில் போட்டி: வாலிபருக்கு அரிவாள் வெட்டு

சென்னை

சென்னை, ஆக. 11: தொழிற் போட்டி காரணமாக வாலிபார் ஒருவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிசென்ற மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் அருண் (வயது 22). இவர் கோவில் திருவிழாக்களில் மேளம் அடிக்கும் தொழில் செய்து வருகிறார்.

நேற்று பிற்பகல் அருண்குமார் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் சந்தித்துள்ளனர். அப்போது அவரது நண்பர்கள் மூன்று பேரும் அருணிடம் உண்ணால் எங்களுக்கு தொழில் நஷ்டம் ஏற்படுகிறது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் அது கைகலப்பாக மாறியது உடனே அருண் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து தனது நண்பர்களை தாக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பினர். அவர்களை அருண் பல இடங்களில் தேடியதாக கூறப்படுகிறது.

அருண் எங்கே தங்களை வெட்டி விடுவாரோ என்ற பயத்தில் பதுங்கி இருந்த மூன்று பேரும் அருணை தாக்கியுள்ளனர். அப்போது அருணுக்கு அருவாள் வெட்டு விழுந்துள்ளது.
தலையில் வெட்டு காயம் அடைந்த அவர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து அருண்குமார் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையிலான அயனாவரம் வழக்கு பதிவு செய்து தலைமறைவான மூன்று பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.