பிகில் படத்தில் முக்கியமான காட்சிகள் ரயில் நிலையத்தில் நடப்பதுபோன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. விஜய் போன்ற முன்னணி நடிகர் படப்பிடிப்பில் கலந்துகொண்டால் சாதாரண இடங்களிலேயே மக்கள் கூட்டம் அதிகமாகிறது. மேலும் படத்தின் காட்சிகள், கதாபாத்திரங்கள் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி விடுகின்றன.

இந்நிலையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் படப்பிடிப்பு நடத்துவது சாத்தியமில்லை. இதனால் படக்குழு பிரம்மாண்டமாக எழும்பூர் ரெயில் நிலைய செட் அமைக்க முடிவு செய்தனர். இதற்காக படத்தின் கலை இயக்குனர் முருகராஜிடம் கூறியவுடன் அவர் பிரம்மாண்ட எழும்பூர் ரெயில் நிலைய செட்டை அமைத்துக் கொடுத்தார்.

அதில் படபிடிப்பு நடைபெற்றது தற்போது விஜய் நடிக்கும் காட்சிகளில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளன. சில காட்சிகளில் விடுபட்ட ஷாட்டுகளை படமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து விஜய் டப்பிங் பணிகளில் கவனம் செலுத்துகிறார். அடுத்த வாரத்திலிருந்து ஏ.ஆர்.ரகுமான் பின்னணி இசையமைக்கும் பணியில் ஈடுபட உள்ளார்.

அட்லீ இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது