ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பயோபிக் படம் தலைவி என்ற பெயரில் உருவாக உள்ளது. பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் ஜெயலலிதா பாத்திரத்தை ஏற்கவுள்ளார்.

தலைவி படத்திற்காக கங்கனா தனது பயிற்சிகளை தொடங்கியுள்ளார். தமிழ் மொழி உச்சரிப்புக்காக பயற்சி பெற்று வரும் அவர், பரத நாட்டியம் பயிற்சியிலும் ஈடுபடவுள்ளார். இப்படத்தில் பரத நாட்டியம் முக்கியமான பங்குவகிக்க உள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் வாழ்வில் முக்கிய பங்குவகித்த மறைந்த முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்.ஜி.ராமச்சந்திரன் பாத்திரத்தில் யார் நடிக்கவுள்ளார் என கேள்விகள் அவ்வப்போது எழுந்து வருகின்றன. தற்போது எம்.ஜி.ஆராக நடிக்க அரவிந்த் சாமி ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.