ஹாலிவுட் படங்களுக்கு நிகராக சாஹோ டிரைலர்

சினிமா

பாகுபலி வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘சாஹோ’. சுஜீத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக ‌ஷ்ரத்தா கபூர் நடித்திருக்கிறார். நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யுவி கிரியே‌ஷன்ஸ் சார்பில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. மதி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு துபாயில் நடந்தது.

இப்படம் ஆகஸ்ட் 30-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து உள்ளது. இதில் வரும் ஆக்‌ஷன் காட்சிகள், கார் சேசிங் காட்சிகள் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டிரைலர் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.