சென்னை, ஆக.11: சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியுள்ளார். இ‰த ச‰FŠH¡ போது தIழக‹ சா˜‰த கோK‚கைகளை GறைவேŸற உதவுமாறு முதலமை„ச˜ வLயுறுˆனா˜.

துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு பதவி ஏற்று 2 ஆண்டுகள் ஆகிறது. அவர் மாநிலங்களவை தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பŸPய நூ™ வெளியீட்டு விழா இன்று காலை 10.30 மணி அளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெŸறது.

இF™ கல‰து கொœள துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு நேற்று சென்னை வந்தடைந்தார். அவரை தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா-வும் நேற்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ச்சியாக, கவர்னர் மாளிகையில் தங்கிய அமித்ஷாவை நேற்றிரவு முதல்வர் பழனிசாமி சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்தது. மேலும் காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடந்து வருகிறது. இந்த நேரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்துள்ளார்.

அவர் வருகையை முன்னிட்டு, வரலாறு காணாத அளவுக்கு போலீஸ் பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் முதல் நிகழ்ச்சி நடைபெறும் கலைவாணர் அரங்கம் வரை சாலையின் இருபுறமும் சுமார் 3000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

நிகழ்ச்சியை முடித்து கொண்டு சென்னையிலிருந்து கர்நாடகா மாநிலம் செல்லும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கு வௌ¢ளபாதிப்பு பகுதிகளை பார்வையிட செ¡றா˜.