புதுடெல்லி, ஆக.12: பக்ரீத் பண்டியை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ‘பக்ரீத்’ ஆகும். இஸ்லாமிய வருடத்தின் 12-வது மாதமான ‘துல் ஹஜ்’ பத்தாவது நாளில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையை தமிழில் ‘தியாகத் திருநாள்’ என்றும், அரபியில் ‘ஈத் அல்-அதா’ என்றும் அழைக்கின்றனர்.

இன்று உலகமெங்கும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘பக்ரீத் பண்டிகை அமைதி மகிழ்ச்சியை சமூகத்தில் மேலும் அதிகரிக்கும் என நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.