போர்ட் ஆப் ஸ்பெயின், ஆக.12: ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுக்கு எதிராக அதிர ரன் எடுத்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். இதன் மூலம் பாக் வீரர் ஜாவேத் மியாண்டட்டின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், கேப்டன் விராட் கோலி தனது 19-வது ரன்னை எடுத்த போது இந்த சாதனையை செய்தார்.

பாக் முன்னாள் வீரரான ஜாவேத் மியாண்டட் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில், 64 இன்னிங்சில் 1,930 ரன்கள் குவித்ததே அதிக பட்சமாக இருந்தது. ஆனால் கோலி 34 இன்னிங்ஸ்களில் 2,032 ரன்கள் குவித்துள்ளார்.

மேலும் கோலி தனது 42-வது சதத்தை பதிவு செய்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் கங்குலியின் (11,363 ரன்கள்) சாதனையினை கோலி (11406 ரன்கள்) முறியடித்துள்ளார்.