திருத்தணி, ஆக.12: திருத்தணி அடுத்தமுருக்கப்பட்டு டகிராமத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு மன்னாதீஸ்வரர் பச்சையம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது. திருத்தணி அடுத்த முருக்கம்ப்பட்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள முனீஸ்வரர், மன்னாதீஸ்வரர் பச்சையம்மன் ஆலையத்தில் 6 ஆம் ஆண்டு ஆடி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய இவ் விழாவில் தினசரி மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மஞ்சள் காப்பு.சந்தன காப்பு நடத்தி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பெண்கள் பொங்கல் வைத்து படையலிட்டு வழிப்பட்டனர்.முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அம்மன் திருக்கல்யாணம் வைபவம் இரவு மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பாக நடைபெற்றது. அப்போது பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் பிரசாரமாக வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சலில் அம்மன் எழுந்தருளிய ஊஞ்சல் சேவை விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துக் கொண்டனர்.