மாணவர்களுக்கான ஓவிய, புகைப்பட பயிற்சி

சென்னை

சென்னை ஆக.12: ஈரோடு இந்தியன் பப்ளிக் ஸ்கூல் ஏற்பாடு செய்திருந்த மாணவர்களுக்கான ஓவிய, புகைபட பயிற்சியை லிடியன் நாதஸ்வரம் பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் இந்தியன் பப்ளிக் ஸ்கூல் குழந்தைகளுக்கென பிரத்யேக செய்தி மற்றும் கலை புகைப்பட திறமையை ஊக்குவிக்கும் இரண்டு புதிய முயற்சிகளை கடந்த 6-ம் தேதி அறிமுகம் செய்தது.

கிட்ஸ் நியூஸ் மற்றும் அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி என்ற இரு புதிய முயற்சிகளை உலக மேடையில் புகழ்பெற்ற லிடியன் நாதஸ்வரம் துவங்கி வைத்தார். அறிமுக நிகழ்வை தொடர்ந்து லிடியன் நாதஸ்வரம் பள்ளி மாணவர்களுடன் உரையாடி, அவர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். பின்னர் மாணவர்கள் முன்னிலையில் பியானோ வாசித்து காண்பித்து அவர்களை உற்சாகப்படுத்தினார்.

மேலும் லிடியனின் சகோதரி அமுர்த வர்ஷினி பாட்டு பாடி அசத்தினார். அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி என்ற சர்வதேச தரத்திலான புதிய முயற்சியை பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர் வடிவமைத்திருக்கிறார். இந்நிகழ்ச்சியில், புகழ்பெற்ற புகைப்பட கலைஞர்கள், ஓவியர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர், மேலும் நக்கீரன் கோபால், லிடியனின் தந்தையும் இசையமைப்பாளருமான வர்ஷன் சதீஷ் ஆகியோர் கலந்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்தியன் பப்ளிக் ஸ்கூல் நிர்வாக இயக்குனர் டாக்டர் சிவகுமார் மற்றும் கிருத்திகா சிவகுமார் சிறப்பாக செய்திருந்தார்கள்.