கோஏர் சார்பில் ஐதராபாத்-சென்னை விமான சேவை

சென்னை

சென்னை, ஆக.12: கோஏர் நிறுவனம் சார்பில் சென்னையிலிருந்து ஐதராபாதிற்கு தினசரி தடையற்ற விமான சேவையைத் தொடங்கி உள்ளது. விமான சேவையான கோஏர் நிறுவனம், சென்னையிலிருந்து ஐதராபாதிற்கு தினசரி தடையற்ற விமான சேவையை தொடங்குவதாக அறிவித்தது. கோஏர் ஜி8 504 விமானம் தினசரி சென்னையிலிருந்து 12:24 மணிக்கு புறப்பட்டு ஐதராபாத்திற்கு 13:55 மணிக்கு செல்கிறது.

அதே போல் கோஏர் ஜி8 504 விமானம் 11:05மணிக்கு ஐதராபதில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு 12:15மணி அளவில் வந்து சேர்கிறது. கடந்த 7-ந் தேதி முதல் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. கோஏர் தற்போது தோராயமாக சுமார் 300 தினசரி விமானங்களை இயக்குகிறது. கடந்த ஜூன் மாதம் முதல் சுமார் 13.3 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்றது.

அகமதாபாத் , பாக்தோக்ரா, பெங்களூரு, புவனேஷ்வர், சண்டிகர், சென்னை, டெல்லி, கோவா, குவஹாத்தி, ஐதராபாத், ஜெய்பூர், ஜம்மு, கொச்சி, கொல்கத்தா, கன்னூர், லே, லக்னௌ, மும்பை, நாக்பூர், பாட்னா, போர்ட்ப்ளேர், புனே, ரான்ச்சி மற்றும் ஸ்ரீநகர் உட்பட 24 உள்ளூர் இடங்களுக்கு கோஏர் விமான சேவை உள்ளது. பேங்காக், ஃபுகேட், மேல், மஸ்கேட், துபாய் மற்றும் அபுதாபி உட்பட 6 சர்வதேச இடங்களுக்கு கோஏர் சேவைஉள்ளது. விரைவில் மேலும் 2 இடங்களுக்கு விமான சேவையைத் தொடங்க உள்ளது.