போர்ட் ஆஃப் ஸ்பெயின், ஆக.12:  மழையின் காரணமாக மைதானத்திற்கு சென்று பயிற்சியில் ஈடுபடமுடியாத நிலையில், தங்கியிருந்த ஹோட்டலிலேயே இந்திய கிரிக்கெட் அணியினர் பயிற்சியில் ஈடுபட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி கிரிக்கெட் விளையாடிவருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான டி-20 தொடரை இந்திய அணி வென்றுள்ள சூழலில், தற்போது ஒருநாள் தொடர் நடந்துவருகிறது.

முதல் ஒருநாள் போட்டி மழையின் காரணமாக பாதியில் கைவிடப்பட்ட நிலையில், 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. போட்டி தொடங்கும் முன்னரே மழை பெய்ததால், வீரர்களால் மைதானத்திற்கு சென்று பயிற்சி எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இந்திய அணி வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலிலேயே பயிற்சியில் ஈடுபட்டனர். இது குறித்த வீடியோவை ரிஷப் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் பந்துவீச, ரிஷப் கீப்பிங் செய்கிறார்.

இந்த வீடியோவை பார்த்து இந்திய அணியினரின் கடமை உணர்வை மெச்சிக்கொண்ட ரசிகர்கள் பூரிப்பாகி உள்ளனர்.