சென்னை, ஆக.12: கமல்ஹாசன் நடிக்க உள்ள இந்தியன்-2 படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியது. இதில் கமலுக்கு வில்லனாக பாபிசிம்ஹா களமிறங்குகிறார். கதாநாயகிகளாக காஜல், ரகுல்ப்ரீத், பிரியா, ஐஸ்வர்யா ஆகியோர் நடிக்கின்றனர்.

ஷங்கர் இயக்கதில் கமல்ஹாசன் நடிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் இந்தியன். தற்போது இந்த படம் இந்தியன்-2 என்ற பெயரில் தயாராக உள்ளது. இதிலும் கமல்ஹாசனே நடிக்கிறார்.

அவருடன் காஜல் அகர்வால், ரகுல்ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் என 4 பேர் கதாநாயகியாக நடிக்கின்றனர். முக்கியமான கதாபாத்திரத்தில் சித்தார் நடிக்கிறார். வில்லன் கேரக்டரில் பாபிசிம்ஹா களமிறங்குகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. கமல்ஹாசனின் வயதான கெட்டப்பிற்காக ஹாலிவுட்டில் இருந்து மேக் அப் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். இருப்பினும் அந்த மேக் அப் இயக்குனர் ஷங்கருக்கு திருப்தி அளிக்காததால். படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதனால் மற்ற கலைஞர்களின் கால்ஷீட்டும் தடைபட்டது. தற்போது அனைத்து பிரச்சனைகளும் முடிக்கப்பட்டு ஷூட்டிங் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை அருகே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட செட்டில் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் கமல் பங்கேற்று நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம்  பிரமாண்டமான முறையில் தயாரிக்கிறது.