சென்னை, ஆக.12: சென்னை விமான நிலையத்தில் மேற்கூரையில் பொருத்தப்பட்டு இருந்த டியூப்லைட் செட் திடீரென அறுந்து கீழே விழுந்ததில் ஏர்-இந்தியா ஒப்பந்த ஊழியர் வீரமணி என்பவர் படுகாயமடைந்தார். இது குறித்து விமான நிலைய போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பல முறை விமான நிலையத்தின் கண்ணாடிகள் உடைந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.