விஞ்ஞானி விக்ரம் சாராபாய்க்கு கூகுள் கௌரவம்

உலகம்

வாஷிங்டன், ஆக.12: ‘இஸ்ரோவின் தந்தை’ என்று போற்றப்படும் விக்ரம் சாராபாய்க்கு கூகுள் டூடுள் வெளியிட்டு கௌரவம் அளித்துள்ளது.

சந்திரயான், மங்கள்யான் என அடுத்தடுத்த விண்கலன்களை இஸ்ரோ நிறுவனம் செலுத்தி வருகிறது. உலக நாடுகள் மத்தியில் விண்வெளி ஆய்வு துறையில் மிகப்பெரும் சாதனை புரிந்து வருகிறது.

இஸ்ரோ தற்போது புரிந்து வரும் பல்வேறு சாதனைகளுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் விக்ரம் சாராபாய். எனவே இவர் ‘இஸ்ரோவின் தந்தை’ என்று போற்றப்படுகிறார். இன்று இவருக்கு 100வது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் கூகுள் நிறுவனம் விக்ரம் சாராபாய்க்கு பிரத்யேகமாக டூடுள் வெளியிட்டு கௌரவம் செய்துள்ளது.