கர்நாடக மழை: வெள்ளத்தில் சிக்கி 40 பேர் பலி

சென்னை

சென்னை, ஆக.12: கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் அந்த மாநிலம் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. கர்நாடகத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேரை காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5.81 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் உள்ள 17 மாவட்டங்களில் 2028 கிராமங்கள் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.