சொந்தகுரலில் டப்பிங் பேச தயாராகும் காஜல் அகர்வால்

சினிமா

‘பழனி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். தற்போது தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் முன்னணி நாயகிகளில் ஒருவராகத் திகழ்பவர். இந்தியிலும் ஒருசில படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் ’இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள ’கோமாளி’ படம் வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில், காஜல் அகர்வால் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கோமாளி படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும். என் படங்களுக்கு நானே டப்பிங் பேச வேண்டும் என நிறைய பேர் சொல்கிறார்கள்.
‘டப்பிங் ஒரு சாதகம் என்பதை மறுப்பதற்கில்லை. விரைவில் நானே என் குரலில் டப்பிங் பேசுவேன். மொழி தெரியாமல் இருப்பது பின்னடைவு தான். தமிழ் சரியாக பேசவராது என்பதால் இது வரை முயற்சி செய்யவில்லை. இந்தியும் சுமாராகவே பேசுவேன். தெலுங்கில் முயற்சி செய்துள்ளேன். ஆனால், அது ஒத்துவரவில்லை என மாற்றிவிட்டார்கள்’. இனி வரும் காலங்களில் நானே டப்பிங் பேச முயச்சி செய்வேன் என்றார்.