ஜி வி பிரகாசின் ஐங்கரன் செப்டம்பர் 5-ல் ரிலீஸ்

சினிமா

காமன்மேன் பிரசன்ஸ் பி.கணேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஐங்கரன்’. ‘ஈட்டி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.

மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷின் வழக்கமான படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் வெளியிட்டார்.
ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இந்த டீசரை பார்த்து வெகுவாக இயக்குனரை பாராட்டினார்கள். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர்.
வரும் செப்டம்பர் 5-ம் தேதி படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.