போர்ட் ஆஃப் ஸ்பெயின், ஆக.12: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணி வெற்றி குறித்து கேப்டன் விராட் கோலி பெமிதம் தெரிவித்துள்ளார்.

இந்த போட்டியில் சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான கேப்டன் கோலிக்கு  ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இது குறித்து அவர் கூறுகையில், போட்டியின் இடையில் பெய்த மழை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு உதவியது. இல்லாவிட்டால் போட்டியின் ‘மிடில் ஓவர்களில்’ பேட் செய்வது கடினமாக இருந்திருக்கும். 270 ரன்களுக்கும் மேலாக நாங்கள் நிர்ணயித்த இலக்கும் இந்தப் போட்டியில் கடினமான இலக்குதான் என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.