புதுச்சேரி, ஆக.12: வெள்ள பாதிப்பு குறித்து அமைச்சர், அதிகாரிகளுடன் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார். புதுச்சேரி மாநிலத்தின் ஒரு பகுதியான ஏனம் பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெள்ளம் பாதித்து அப்பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு நிவாரண பணிகள் மேற்கொள்வது சம்பந்தமாக புதுச்சேரி சட்டமன்ற கமிட்டி அரங்கில் முதலமைச்சர் நாராயணசாமி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் புதுச்சேரி கலெக்டர் அருண் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது