பத்ம பூஷன் விருது பெற்ற விஞ்ஞானி நம்பி நாராயனன் குறித்த திரைப்படத்தில் மாதவனுடன் சூர்யா, ஷாருக்கான் ஆகிய முன்னனி நாயகர்கள் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானியும், மிக சிறந்த அறிவியலாளருமானவர் நம்பி நாராயணன். 1994ம் ஆண்டு இஸ்ரோ ரகசிய ஆவணங்களை மாலத்தீவுக்கு இவர் திருட்டுத்தனமாக கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. 2018ம் வருடம் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லையென கூறி வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நம்பி நாராயணின் வாழ்க்கையையும், அவரது கண்டுபிடிப்புகள் இந்தியாவை மேம்படுத்தியது குறித்தும் ஒரு திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருக்கிறார் நடிகர் மாதவன். ”ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்” என்ற இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரபல தமிழ் நடிகர் சூர்யாவும், ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாரூக் கானும் கௌரவ தோற்றத்தில் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் சூர்யா ஒரு பத்திரிக்கையாளர் கதாப்பாத்திரத்தில் வருவதாக கூறப்படுகிறது.
தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தயாராகி இருக்கும் இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.