சென்னை, ஆக.12: திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் ஷகிலா பானு (வயது 36). இவர் அதே பகுதியில் உள்ள கவரிங் நகைக்கடை ஒன்றுக்கு நகை வாங்குவதற்காக நேற்று சென்றுள்ளார். அப்போது, அந்த கடைக்கு மேலும் இரு பெண்கள் வந்து நகைகளை பார்த்துவிட்டு டிசைன் பிடிக்கவில்லை என்று கூறி, நகைகளை வாங்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

இதனிடையே, நகை வாங்கிய ஷகிலா, பணம் எடுப்பதற்காக தனது கைப்பையை பார்த்தபோது, கடையின் நாற்காலிமேல் வைத்திருந்த கைப்பை மாயமானது தெரியவந்தது. அதில், ரூ.10,000 பணம், செல்போன், ஒரு சவரன் தங்க சங்கிலி இருந்துள்ளது. இது குறித்து, ஜாம்பஜார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.