திருத்தணி ஆக,12: விஜயகாந்த் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தே.மு.தி.க. திருவள்ளூர் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் டி.கிருஷ்ணமூர்த்தி அறிவுறுத்தி உள்ளார். தே.மு.தி.க. திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் திருத்தணியில் நடைபெற்றது.

வருகிற 25ந் தேதி கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கும் இந்த கூட்டத்தில் ஆவடி, பூந்தமல்லி, திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு உள்ளிட்ட தொகுதியில் அடங்கிய மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட செயலாளார் திருத்தணி டி.கிருஷ்ணமூர்த்தி பேசுகையில் கூறியதாவது:- கட்சியின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை அனைத்து பகுதிகளிலும் ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்யும் விழாவாகவும், மாணவர்களுக்கு, பள்ளி சீருடைகள், கல்வி உபகரணங்கள் வழங்கும் விழாவாகவும் கொண்டாட வேண்டும். அனைத்து குக்கிராமப் பகுதிகளிலும் தே.மு.தி.க. கொடியேற்றி கல்வெட்டு திறக்க வேண்டும்.

விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கிராமங்கள் தோறும் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். வருகிற 25ந் தேதி பிரேமலதா கலந்துக்கொள்ளும் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் பூந்தமல்லியில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்திற்கு அதிகளவில் வாகனங்களில் நிர்வாகிகள், தொண்டர்களை அழைத்து வர வேண்டும். இயற்கை வளம் பாதுகாக்கும் வகையில் ஒரு கொடிக் கம்பம் நடும் இடத்தில் பக்கத்தில் ஒரு மரக்கன்று நட்டு பசுமையை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர்; செந்தில் குமார், பொருளாளர் சேகர், திருத்தணி தொகுதி பொறுப்பாளர் டி.சசிகுமார், பொதுக் குழு உறுப்பினர்கள் என்.எஸ்.பி. ஈஸ்வரன், பி.கே.சேகர், நகர செயலாளா; டி.தாமு, ஒன்றிய செயலாளர் பி.சுரேஷ் மற்றும் பிற அணிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.