பார்க்கிங் பகுதியாக மாற்ற மக்கள் கோரிக்கை

சென்னை

சென்னை, ஆக. 12: வேலூரில் ரூ.1கோடியில் கட்டப்பட்ட நடைபாதை கடைகளை வியாபாரிகள் பயன்படுத்தாததால் அந்த இடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. எனவே அந்த இடத்தை பார்க்கிங் பகுதியாக மாற்ற வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூரின் மைய பகுதியான சாரதி மாளிகை அருகே மீன் மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட்டு வந்தது அதை சில ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் மக்கான் பகுதிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது பழைய இடத்தை மாநகராட்சி நிர்வாகம் சீரமைத்து ஒரு கோடி ரூபாய் செலவில் 250 நடைபாதை கடைகளை கட்டி ஏலம் விட்டு வியாபாரிகளுக்கு நாள் வாடகைக்கு விடப்பட்டது.

வாடகை அதிகமாக இருந்ததால் கடைகளை ஏலம் எடுக்க வியாபாரிகள் யாரும் முன்வரவில்லை. இதனால் மூன்று ஆண்டுகளாக கடைகள் மூடியே உள்ளது. இதனால் அந்த இடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. எனவே வேலூர் மாநகராட்சி நிர்வாகம் இந்த இடத்தை பொது மக்களின் பயனுக்கு உதவும் வகையில் பார்க்கிங் மற்றும் வேறு ஏதேனும் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.