சென்னை, ஆக.12: கோட்டூர்புரம் அருகே சென்றுக்கொண்டிருந்த கார், கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்தனர். கோட்டூர்புரம் பாலம் அருகே இன்று காலை அதிவேகமாக சென்ற கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பிளாட்பாரத்தின்மீது மோதி நின்றுள்ளது. இதில், அந்த காரில் பயணித்த ஒரு பெண் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

இது குறித்த தகவலறிந்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். குடிபோதையில் காரினை ஓட்டியதே விபத்திற்கு காரணம் என போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.