காஞ்சிபுரம், ஆக.13: காஞ்சிபுரம், ஸ்ரீ அத்தி வரதர் வைபவம் 44-ம் நாள் இளம் பச்சை மற்றும் இளம் ஆரஞ்சு வண்ண பட்டாடை அணிந்து தோளில் மற்றும் கைகளில் எட்டு கிளிகளை வைத்தபடி ராஜா மகுடம் அணிந்தவாறு பக்தர்களுக்கு காட்சியருளும் ஸ்ரீ அத்தி வரதரை நீண்ட வரிசையில் சென்று பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.

நேற்று 43-வது நாளான நள்ளிரவு 2 மணியளவில் பொது தரிசனம் அனுமதிக்கப்பட்டு 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

இன்னும் 3 நாட்களுக்கு மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும் என்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படுகிறது.

43 நாட்களில் 89 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

சுமார் 4 மணி நேரமாக 3 கிமீ தூரத்தில் நின்று காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்

ஆகஸ்ட் 16 அன்றுடன் பக்தர்களுக்கு தரிசனம் அனுமதி நிறைவு பெறுகிறது.

காஞ்சி நகருக்கு செல்லும் சாலைகளெல்லாம் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதால் இன்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வேலூர், தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து வரும் பேருந்துகள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன.