மும்பை, ஆக.13:  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரஹானே, அடுத்த ஐபிஎல் தொடரில் இருந்து டெல்லி அணிக்கு மாறுகிறார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரஹானே. ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். அவர் தலைமையில் அணி, தொடர்ந்து தோல்வியை சந்தித்ததால், அவர் நீக்கப்பட்டு ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், எதிர்வரும் ஐபிஎல் தொடரில் அவர் டெல்லி அணிக்கு மாறுவதாக தகவல் கசிந்துள்ளது. அவரை, வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் அந்த அணி ஈடுபட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து டெல்லி அணியின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருவது உண்மைதான். இப்போதே அதுபற்றி சொல்ல இயலாது. இன்னும் ஒப்பந்தம் முடியவில்லை முடிந்த பின் அறிவிக்கிறோம் என்றார்.