பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மூத்த மகனும், நடிகர் ஜீவாவின் சகோதரருமான ரமேஷ் தமிழில் ஜித்தன் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்த அவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பின்னர் சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் அவருக்கு தம்பியாக நடித்தார்.

அதன் பின்னர் தந்தையுடன் இணைந்து தயாரிப்பில் ஈடுபட்ட ரமேஷ் தற்போது தெலுங்கில் நிரீக்ஷ்னா என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதற்காக தனது கெட்டப்பையும் மாற்றி கெத்தாக உள்ளார்.