‘ஆதித்ய வர்மா’ படத்தின் இன்ப இசை விருந்து

சினிமா

நடிகர் விக்ரமின் மகன் துருவ் நடித்து வரும் படம் ‘ஆதித்ய வர்மா’. இந்த படம் தெலுங்கில் விஜய் தேவாரகொண்ட நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக் ஆகும். ஏற்கனவே இந்த படத்தை வர்மா என்ற பெயரில் இயக்குனர் பாலா தமிழில் ரீமேக் செய்தார்.

அந்த படம் தயாரிப்பாளருக்கு திருப்தியை தராததால் புதிதாக இயக்கும்படி கூறி தெலுங்கு, அர்ஜூன் ரெட்டி படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவரை அழைத்து இந்த படத்தை இயக்க வைத்தார். ‘ஆதித்ய வர்மா’ என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்றிரவு 7 மணிக்கு இந்த படத்தின் இன்ப இசை விருந்து வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.