எஸ் கே படத்தின் தலைப்பு ‘நம்ம வீட்டு பிள்ளை’

சினிமா

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்தை ‘கடைக்குட்டி சிங்கம்‘ திரைப்படத்தை இயக்கிய பாண்டிராஜ் இயக்குகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, சூரி, சமுத்திரக்கனி, நடராஜ், ஆர்.கே.சுரேஷ் என பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் தலைப்பு நேற்று காலை வெளியிடப்பட்டது.

இந்த படத்திற்கு ‘நம்ம வீட்டு பிள்ளை’ என பெயர் வைத்துள்ளனர். முதலில் எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை பட தலைப்பை முடிவு செய்து விஜய புரொடக்ஷன் நிறுவனத்திடம் கேட்டனர். அவர்கள் அனுமதி மறுக்கவே நம்ம வீட்டு பிள்ளை என மாற்றி வைத்துள்ளனர். இப்படம் செப்டம்பர் மாதம் வெளியிட உள்ளனர்.