பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவாரகொண்டா

சினிமா

அர்ஜூன் ரெட்டி படம் மூலம் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை தன் வசப்படுத்தியவர் இளம் நடிகர் விஜய் தேவாரகொண்டா. தொடர்ந்து கீதா கோவிந்தம், நோட்டா, டியர் காம்ராட் போன்ற பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக உள்ளார்.

இந்நிலையில், தெலுங்கில் பிரபல இயக்குனராக விளங்கும் பூரி ஜெகன்நாத் இயக்கும் புதிய படத்தில் விஜய் தேவாரகொண்டா நடிக்க உள்ளார். இந்த படத்தை பூரி ஜெகன்நாத்தே தனது சொந்த நிறுவனம் சார்பில் தயாரிக்க உள்ளார். இதில் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக விஜய் தேவாரகொண்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.