கார்த்திக் சுப்புராஜ் படத்தில் கீர்த்தி சுரேஷ்

சினிமா

மேயாதமான், மெர்குரி ஆகிய படங்களை தயாரித்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் புரோடக்ஷன் நிறுவனத்தின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, கதை, திரைக்கதை வசனம் எழுதி, ஈஸ்வர் கார்த்திக் இயக்குகிறார்.

மர்மங்கள் நிறைந்த உணர்வுபூர்வமான திர்ல்லர் கதையாக உருவாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. சமீபத்தில் எந்த தமிழ் படத்திலும் கமிட்டாகாமல் இருந்த கீர்த்தி சுரேஷ் இந்த படத்தின் கதை பிடித்து விடவே உடனடியாக ஒப்புக்கொண்டுள்ளார். சமீபத்தில் மகாநடி படத்திற்காக கீர்த்தி சுரேசுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.