மயிலாடுதுறையை மாவட்டமாக்குக: விஜயகாந்த்

சென்னை

சென்னை, ஆக.14: மயிலாடுதுறையை தலை மையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாக அமைக்க அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 1991-ம் ஆண்டிலிருந்து போராடி வருகின்றனர். 97-ம் ஆண்டு நாகை மாவட்டத்தை 2ஆக பிரித்து திருவாரூர் மாவட்டம் உதயமானது. மயிலாடுதுறை மக்களின் கோரிக்கையை பரிசீலித்த அரசு 2004-ம் ஆண்டு மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவாக்கு வதற்கு கொள்கை அளவில் முடிவெடுத்தது.

ஆனால் இன்று வரை நிறைவேற்றப் படவில்லை. எனவே மயிலாடு துறையை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கையில் கூறியுள்ளார்.