போர்ட் ஆஃப் ஸ்பெயின், ஆக.14:  வெஸ்ட் இண்டீசுக்கு (விண்டீஸ்) எதிராக இன்று நடைபெற உள்ள கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்று ரசிர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடிவரும் இந்தியா அணி, தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. முதல் போட்டி மழையால் பாதியில் ரத்தானது. 2-வது போட்டியில் இந்திய வெற்றிபெற்று, 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஏற்கெனவே இரண்டாவது ஒருநாள் போட்டியை வென்ற இந்திய அணி இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிப் பெற்று தொடரை கைப்பெற்றும் முனைப்பில் உள்ளது. அதேசமயம் இப்போட்டியில் வென்று ஒருநாள் தொடரை சமனில் முடிக்க வெஸ்ட் இண்டீஸ் போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நெருக்கடியில் தவாண்:
தொடக்க வீரரான ஷிகர் தவாண், விண்டீசுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 போட்டிகள் முறையே 1, 23, 3 ரன்கள் மட்டுமே சேர்த்தார். 2-வது ஒருநாள் போட்டியிலும் 2 ரன்கள் மட்டுமே சேர்த்து அதிர்ச்சி அளித்தார். ஏற்கெனவே அணிக்குள் இடம் பிடிக்க இளம் வீரர்கள் இடையே கடுமையான போட்டி நிலவி வரும் சூழலில், அணியில் நீடிக்க தனது இழந்த பார்மை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஷிகர் தவண் உள்ளார்.